அமெரிக்க காங்கிரஸிக்குள் நுழைய முயற்சித்தவருக்கு 7 ஆண்டு சிறை
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸ் அவை நடத்தப்படும் கெப்பிட்டல் கட்டடத்திற்கு அருகில் ஏற்பட்ட போராட்டத்தை வழிநடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கை ரெஃபிட் என்ற நபருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
49 வயதான இந்த நபர் டெக்சாஸில் வசித்து வரும் பெட்ரோலியம் தொடர்பாக தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளி என கூறப்படுகிறது.
பொலிஸாருடன் மோதலை ஏற்படு்த்திய சந்தேக நபர்
இந்த விசாரணைகளுக்காக நீதிமன்றம் காணொளி காட்சிகளை அடிப்படையாக எடுத்துக்கொண்டதுடன் சந்தேக நபர் பொலிஸாருடன் மோதலை ஏற்படுத்திக்கொண்டு கெப்பிட்டல் கட்டடத்திற்குள் பலவந்தமாக போராட்டகாரர்களை அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளமை காணொளி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக அவரது மகன் சாட்சியமளித்துள்ளமை இங்கு முக்கிய விடயமாகும். என்னை தடுத்து நிறுத்தினால், நீ தேசத்துரோகி, துரோகிகளுக்கு தண்டனை மரணம் என தனது தந்தை தன்னை அச்சுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த தினத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளி காட்சிகளில் சந்தேக நபர் போராட்டகார்களை தூண்டி விடுவதை காணக்கூடியதாக உள்ளது.
சபாநாயகரை வெளியில் இழுத்து வர திட்டமிட்ட சந்தேக நபர்
அதேவேளை அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் சபாநாயகரை கெப்பிட்டல் கட்டடத்தில் இருந்து வெளியில் இழுத்து வர திட்டமிடப்பபட்டுள்ளதாக சந்தேக நபர் போராட்டகாரர்களிடம் கூறியுள்ளார்.
சபாநாயகரின் தலை அனைத்து படிக்கட்டுகளிலும் படும் விதமாக இழுத்து வர வேண்டும் என சந்தேக நபர் கூறியது சாட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது.
இந்த விடயங்களை கவனத்தில் கொண்ட டெக்சாஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி டெப்னி பெட்ரிக் சந்தேக நபருக்கு 87 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் குற்றவாளி கை ரெஃபிட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடனின் வெற்றி ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் ஆதரவாளர்கள்
மேற்படி சம்பவம் தொடர்பாக 900 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி, டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கெப்பிட்டல் கட்டடத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தனர்.