வவுனியாவில் ஏற்பட்ட விபத்தில் 7 வயது சிறுவன் பலி
வவுனியா (Vavuniya) பாவற்குளம் பகுதியில் துவிச்சக்கரவண்டி மீது பேருந்து மோதிய ஏற்பட்ட விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக உளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம், நேற்று (31.12.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
வவுனியா, பாவற்குளம், படிவம் இரண்டு பகுதியில் சாரதி பேருந்தை நிறுத்தி விட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுவதற்காக பேருந்தை செலுத்திய போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு சிறுவர்கள் வீதியை ஊடறுக்க முற்பட்ட போது பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 7 வயதுடைய அப்துல் மஜித் உமர் என்ற சிறுவன் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |