கோர விபத்தில் 7 வயது சிறுவன் பலி! தந்தை படுகாயம்
மொனராகலை மாவட்டம், பிபிலை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஏழு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது தந்தை படுகாயமடைந்துள்ளார்.
இந்த துயர சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
பிபிலைப் பகுதியைச் சேர்ந்த தந்தை தன் மகனுடன் ஓட்டோவில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதி பொலிஸாரால் கைது
இந்த கோர விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியை செலுத்திச்சென்ற சிறுவனின் 38 வயதுடைய தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri