சொர்க்கத்தை காட்டுவதாக மனித உயிர்களை பலியெடுக்கும் கும்பல்
சொர்கத்திற்கு செல்வதாக கூறி பூமியில் உயிர் துறக்க வேண்டும் என்ற மத போதனையை பரப்பி 7 பேரை உயிரை மாய்க்க தூண்டிய ருவான் பிரசன்ன குணரத்னவின் கும்பலுடன் நேரடியாக தொடர்புபட்ட 30 பேர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மற்றும் புலனாய்வு அமைப்புகளால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, இந்த குழு அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றும் சாமானியர்களுக்கு மேலதிகமாக சில பௌத்த பிக்குகளும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
பொலநறுவை மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களில் பௌத்த மத போதனை எனக் கூறி ருவன் பிரசன்ன சுமார் 10 வருடங்களாக கட்டுக்கதைகளை பரப்பி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரை மாய்க்கும் மக்கள்
அவரைப் பின்பற்றுபவர்கள் என அடையாளம் காணப்பட்ட 30 பேர் தீவிரவாதக் கருத்துக்களில் இருந்து அவர்களை விடுவிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த கும்பலின் கருததுக்களை நம்பி கடந்த வாரம் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரை மாய்த்துக் கொண்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
