கொழும்பில் தாய், மகன் இணைந்து செய்த மோசமான செயல் : பல இலட்சம் ரூபா நாசம்
கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை கைது செய்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்னர்.
சித்தமுல்ல, சுமக மாவத்தையில் உள்ள வீடொன்றிற்குள் பலவந்தமாக நுழைந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டுக்குள் கொள்ளை
இதன்போது வீட்டின் உரிமையாளர்களை தாக்கியதுடன் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

கொள்ளையில் ஈடுபட்டவர்களில் தாயும் மகனும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை
கொள்ளையர்கள் பயணித்த கார் மற்றும் முச்சக்கர வண்டி என்பன பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் புகுந்த கும்பலின் தாக்குதலால் வீட்டின் சொத்துக்களுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam