இந்தியாவில் மீண்டும் பரபரப்பு! வெடிப்பு விபத்தில் 7 பேர் பலி - 27 படுகாயம்..
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பொலிஸ் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
7 பேர் பலி
அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடிவிபத்தில் தடயவியல் குழு, பொலிஸார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
🇮🇳 Indian media NDTV says that mass casualties have been reported in a massive explosion at Nowgam Police Station in Kashmir
— The Daily News (@DailyNewsJustIn) November 14, 2025
According to local reports, seized ammonium nitrate exploded at Nowgam Police Station in Srinagar, in Jammu & Kashmir, India, triggering a massive blaze. pic.twitter.com/auSodoo88c
பொலிஸ் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் வெடி விபத்தில் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன. தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் திகதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் பொலிஸார் நடத்திய சோதனையில் 3000 கிலோகிராம் அமொனியம் நைட்ரைட் என்ற வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
நாடு முழுவதும் அதிர்ச்சி
இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முஸமில் ஷகீல் கனியா என்ற நபரை பொலிஸார் கைது செய்தனர்.
🚨BREAKING:
— India Defence Daily (@IndiaDefDaily) November 14, 2025
Srinagar, J&K | Security forces, along with sniffer dogs,
arrive to carry out the investigation where the blast occurred near the premises of Nowgam police station in Jammu and Kashmir#SrinagarBlast
pic.twitter.com/KL6TKaBw8X
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் வெடிபொருட்களை ஆய்வு செய்துக் கொண்டிருந்தபோது திடீரென அந்த வெடிபொருட்கள் வெடித்ததால் தடயவியல் குழு, பொலிஸார் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் 27க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், மீண்டும் வெடிபொருள் வெடித்து 7 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.