இந்திய கடற்றொழிலாளர்கள் 7 பேருக்கு நாளைவரை விளக்கமறியல்
கடந்த மாதம் 13ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் (ஓகஸ்ட்) 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 07 தமிழக கடற்றொழிலாளர்களும் இன்று யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்னர்.
இதன்போதே இவர்களது விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று வழக்கு விசாரணைக்கு
இவர்கள் கடந்தமாதம் 20ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் அன்றையதினம் வழக்கினை எடுத்துக்கொண்ட நீதவான் இன்றுவரை(17) விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.
மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 7 கடற்றொழிலாளர்களது விளக்கமறியலை நாளைவரை (18) நீடித்து நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



