பணத்திற்கு சூது விளையாடிய ஆறு பேர் கைது
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பணத்திற்காக சூது விளையாடிய ஆறு பேரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு(6) இடம்பெற்ற இக்கைது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 38,32,45,22,மற்றும் 20 வயதுடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தளாய் பேராறு ஆற்றங்கரை பகுதியில் பணம் செலுத்தி சூது விளையாடிக் கொண்டிருந்த போது கந்தளாய் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றி வளைத்து சூது விளையாடிய ஆறு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சூது விளையாடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இருபதாயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களைத் தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிவான் நீதிமன்றில்
முன்னிறுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri