திருகோணமலையில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற 67 பேர் கைது (Video)
திருகோணமலை சாம்பல்தீவு, சல்லி பிரதேசத்தில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் எந்த நாட்டுக்கு செல்ல முயற்சித்தனர் என்று தகவல்கள் வெளியாகவில்லை.
கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்கள், 3 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.
இவர்கள், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின்போது, குறித்த பயணத்துக்காக பயன்படுத்தப்பட்ட 3 முச்சக்கரவண்டிகள், ஒரு கெப் வாகனம், ஒரு வேன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பொருளாதார சுமை காரணமாக ஏற்கனவே இலங்கையின் வடக்கில் இருந்து பலர் இந்தியாவுக்கு கடல் வழியாக சட்டவிரோமாக சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வெளிநாட்டு பெண்ணை 11 ஆண்டுகளாக காதலித்த தமிழர்! உறுதியாக இருந்த ஜோடி... இறுதியில் சுபம் News Lankasri

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.. மறுபிறவிக்காக தற்கொலை அல்ல! கொல்லப்பட்டது அம்பலம் News Lankasri

உலகம் முழுவதும் வசூலில் புதிய சாதனை படைத்த கமல்ஹாசனின் விக்ரம்- போட்றா வெடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam
