வாகன பழுதுபார்பதற்காக பல மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
ஜனாதிபதி செயலகத்தில் வாகன பழுதுபார்பதற்காக பல மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை பழுதுபார்ப்பதற்காக 640 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பல மில்லியன் ரூபாய் ஒதுக்கம்
இதில் சுமார் 189 வாகனங்கள் பழுதுபார்க்கப்பட்டன.
அவை, 1 மில்லியன் முதல் 40 மில்லியன் ரூபாய் வரை மதிக்கத்தக்க வாகனங்கள் என தெரிய வந்துள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையின் படி, இந்த பழுதுபார்ப்புகளுக்காக மொத்தம் 645,336,744 ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கணக்காய்வு அறிக்கையின்படி, மேலும் 53 வாகனங்கள் மீண்டும், மீண்டும் பழுதுபார்க்கப்பட்டதாகவும், சில வாகனங்கள் 10 முதல் 17 முறை வரை பழுதுபார்க்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.




