2030 காற்பந்து உலககிண்ணத்தில் 64 நாடுகளுக்கு வாய்ப்பு
2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காற்பந்து உலகக்கிண்ணத்தில் 64 நாடுகள் போட்டியிடுவதற்கான வாய்ப்பளிக்க காற்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
காற்பந்து உலகக்கிண்ணத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டு காற்பந்து உலகக்கிண்ணத்தை ஆபிரிக்க நாடான மொரோக்கோ, ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.
2026 உலகக்கிண்ணம்
காற்பந்து உலகக்கிண்ண வரலாற்றில் முதன்முறையாக இரண்டு கண்டங்களை சேர்ந்த நாடுகள் தொடரை நடத்தவுள்ளமை இதுவே முதல் முறையாகும்.
இதேவேளை, நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகளிலும் ஒரு ஒரு போட்டி வீதம் நடத்த சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள காற்பந்து உலகக்கிண்ணம், அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடத்தப்பட உள்ளது.
இதில் 32 தொடக்கம் 48 வரையான நாடுகள் பங்கேற்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 14 மணி நேரம் முன்

46 வயதில் கர்ப்பம்: வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- குவியும் வாழ்த்துக்கள் Manithan
