ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த 63 வயது பெண் உயிரிழப்பு
மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணமுரேகம பகுதியில் ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று(26.04.2026) உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
இவர் ரணமுரேகம பகுதியில் தங்கியிருந்த போது, ஏணியொன்றின் உதவியுடன் வீட்டின் கூரை மீது ஏற முயற்சித்துள்ளார்.

இதன்போது, எதிர்பாராத விதமாக ஏணியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.
உடனடியாக மீட்கப்பட்ட அவர் லக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், லக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam