தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 625 பேர் கைது
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 62710 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச் சாவடிகளில், 858 வாகனங்களில் பயணித்த 1,410 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தீவிமடைந்த கோவிட் தொற்று நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 20ஆம் திகதி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri