திருகோணமலை மாவட்டத்தில் 623 குடும்பங்கள் சீரற்ற கால நிலையால் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் நேற்று வரைக் 623 குடும்பங்களை சேர்ந்த 1789 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பிரதி பணிப்பாளர் கே.சுகுணதாஸ் தெரிவித்தார்.
இதில் சேருநுவர பிரதேச செயலக பகுதியில் 26 குடும்பங்களை சேர்ந்த 69 நபர்களும், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த 440 குடும்பங்களை சேர்ந்த 1152 நபர்களும், தம்பலகாமம் பிரிவில் சேர்ந்த 08 குடும்பங்களை சேர்ந்த 40 நபர்களும் , வெருகல் பிரசேச செயலக பிரிவை சேர்ந்த 01 குடும்பத்தை சேர்ந்த 2 நபர்களும், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பகுதியை சேர்ந்த 148 குடும்பங்களை சேர்ந்த 526 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 177 குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளிலும் 19 குடும்பங்கள் இடைத் தங்கள் முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.