மயிலிட்டித் துறைமுகத்தில் இருந்து அகற்றப்பட உள்ள இந்தியப் படகுகள்
அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் அரசுடைமையாக்கப்பட்டு மயிலிட்டித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் 62 இந்தியப் படகுகள் ஏற்றிச் செல்லப்பட்டு அச்சுவேலித் கைத்தொழில் பேட்டையில் கொட்டப்படவுள்ளன.
ஜனாதிபதி அநுராகுமார திஸாநாயக்க எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி மயிலிட்டித் துறைமுகத்தைப் பார்வையிட வருகின்றார்.
அதனையொட்டி அந்தப் பகுதியில் தற்போது தரித்து நிற்கும் 123 இந்தியப் படகுகளில் பெரும் பகுதி உடனடியாக அங்கிருந்து அகற்றப்படவுள்ளன.
அகற்றப்பட உள்ள படகுகள்
மயிலிட்டியில் தரித்து நிற்கும் 123 இந்தியப் படகுகளில் 48 படகுகளின் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 13 படகுகள் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டன. இதில் 7 படகுகள் இந்திய கடற்றொழிலாளர்களால் எடுத்துச் செல்லப்படவுள்ளன.
இதேபோன்று, அரசுடமையாக்கப்பட்ட 64 படகுகளும் தரித்து நிற்கின்றன. அரச உடமையாக்கப்பட்ட 64 படகுகளில் முன்னாள் அமைச்சரின் பணிப்பில் கடற்றொழில் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட இரு படகுகள் தவிர்ந்த 62 படகுகளே மயிலிட்டியில் இருந்து அகற்றப்படவுள்ளன.
இவ்வாறு மயிலிட்டித் துறைமுகத்தில் உள்ள 62 படகுகளும் ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் இன்று வெளியே இழுத்து எடுக்கப்படவுள்ளன.
அவ்வாறு எடுக்கப்படும் படகுகள் பாரம் தூக்கிகள் மூலம் தட்டுப் பாரவூர்திகளில் ஏற்றப்பட்டு அச்சுவேலிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan
