இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலில் ஐவரும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதிப்படுத்தியுள்ளார்.
தகவல் திணைக்களத்தில் இன்று(28) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
“கைது செய்யப்பட்டவர்களில் 'கெஹெல்பத்தர பத்மே', 'கொமாண்டோ சலிந்த', 'பெக்கோ சமன்' மற்றும் 'நிலங்க' ஆகியோரும் உள்ளனர்.
தேடுதல்
கடந்த ஏழு நாட்களாக எமது பொலிஸார் மற்றும் இந்தோனேசியா பொலிஸார் இணைந்து நடத்திய தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தில் இந்தியாவின் புலனாய்வு பிரிவினர், சர்வதேச பொலிஸார் ஆகியோர் உதவி செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைத்த ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
