20 வருடங்களாக சாக்கடை நீரை அருந்தி வரும் 600 மலையக குடும்பங்கள்!

Sri Lanka Upcountry People Nuwara Eliya Sri Lanka Jeevan Thondaman Hatton
By Malaivanjan Apr 23, 2023 11:25 AM GMT
Report

ஹட்டனிலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரொத்தஸ் கொலனியில் வாழும் சுமார் 600 குடும்பங்கள் கடந்த 20 வருடங்களாக சாக்கடை நீரை அருந்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த குடிநீரை நாளாந்தம் அருந்துவதன் காரணமாகப் பலர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வயோதிபங்கள் சிறுவர்கள் அடிக்கடி வயிற்று வலி, வாந்தி மற்றும் ஏனைய நோய்கள் காரணமாகவும் மருந்து எடுத்து வருவதாகவும்  குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பிரதேசத்திற்குச் சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்காததன் காரணமாக, இங்கு வாழும் மக்கள் குளிப்பதற்குப் பயன்படுத்தும் நீரினை குடிப்பதற்கும் பயன்படுத்துவதாகக் கூறப்படுகின்றது.

20 வருடங்களாக சாக்கடை நீரை அருந்தி வரும் 600 மலையக குடும்பங்கள்! | 600 Families Drinking Sewer Water For 20 Years

குடிப்பதற்கு உகந்ததில்லை

இந்த நீரில் ஹட்டன் - ஆரியகம மற்றும் ஆஞ்சநேயர் ஆலய பகுதியில் வசிக்கும் மக்களால் பயன்படுத்தப்பட்டு விடுவிக்கப்படும் கழிவு நீர் குறித்த நீரில் கலப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த குடிநீர் விடயம் குறித்துப் பல தடவைகள் மலையக அரசியல் தலைவர்கள் முதல் நாட்டின் ஜனாதிபதி பிரதமர் வரை தெளிவுபடுத்தப்பட்டபோதிலும், இது வரை எந்த வித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

தேர்தல் காலங்களில் மட்டும் இந்த விடயத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதாகத் தெரிவித்து வாக்குகளைப் பெற்றுச் செல்வதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நீர் குடிப்பதற்கு உகந்ததா? என்று பிரதேச செயலகத்தில் சோதனை செய்து பார்த்தபோது, குடிப்பதற்கு உகந்ததில்லை எனச் சுகாதார பிரிவினர் தெரிவித்ததாகவும் வேறு வழியின்றி இந்த நீரினை குடித்து வருவதாகவும் பலர் கூறியுள்ளனர்.

20 வருடங்களாக சாக்கடை நீரை அருந்தி வரும் 600 மலையக குடும்பங்கள்! | 600 Families Drinking Sewer Water For 20 Years

நீர்ப் பாசன அமைச்சர் ஜீவன் தொண்டமான்

ரொத்தஸ் கொலனிக்கு குடிநீரினை பெற்றுக்கொள்வதற்காக நீர் வழங்கல் வடிகால் சபையிடம் சென்று பேசிய போது அதற்குக் கோடிக்கணக்கில் செலவிட வேண்டி வருவதாகத் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரதேசத்தின் குடிநீர் விடயம் தொடர்பில் தற்போது உள்ள நீர்ப் பாசன அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

அத்துடன், அதிகப் பணம் செலவிடா விட்டாலும் இருக்கும் நீரினை சுத்தப்படுத்திப் பெற்றுக்கொடுத்தாலே போதுமானதாக இருக்கும் என இன்னும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

எது எவ்வாறான போதிலும், நீர் வளம் நிறைந்த மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் இன்றி கஷ்ட்டப்படுவது மிகவும் வெட்கப்பட வேண்டிய விடயம் என ஒருவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. 

You may like this Video


மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US