கிழக்கு மாகாணத்தில் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
கிழக்கு மாகாணத்தில் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும்,கூடுதலாக கல்முனை தெற்கில் 15 பேரும், காரைதீவில் 13 பேரும், கிண்ணியாவில் 5 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை, இன்று (11) வரை 1,647 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து பேலியகொட கொத்தணி மூலமாக இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 382 பேரும் ,கல்முனை பிராந்தியத்தில் 966 பேரும்,திருகோணமலை மாவட்டத்தில் 210 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 66 பேருமாக 1,624 பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
மேலும், வெளிநாட்டிலிருந்து வந்த, மினுவாங்கொட, கந்தக்காடு கொத்தணி, வெலிசற கடற்படை முகாம்களிலிருந்து, மீதி 23 தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam