நுவரெலியாவில் 60 கிலோ எடையுள்ள சிறப்பு கிறிஸ்துமஸ் கேக்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 60 கிலோ எடையுள்ள சிறப்பு கிறிஸ்துமஸ் கேக்கிற்கான கலவையை தயாரிக்கும் நிகழ்வு நுவரெலியா அரலியா கிரீன் ஹில்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு ஹோட்டலின் பொது மேலாளர் லக்மல் பெரேரா மற்றும் தலைமை நிர்வாக சமையலறை சமையல்காரர் சஞ்சீவ பிரேமதுங்க ஆகியோரின் தலைமையில் (25) சனிக்கிழமை மதியம் ஹோட்டலில் ஒரு விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் இசை வாத்திய அணிவகுப்புடன் ஹோட்டலில் பணிபுரியும் சமையல்காரர்கள் பலவிதமான முந்திரி, திராட்சை, இஞ்சி தோசை, பூசணி தோசை ,பாதாம், பிஸ்தா மற்றும் 06 லிட்டர் வெளிநாட்டு மதுபானம் , உலர் பழங்களில் மதுபானங்கள் உள்ளிட்ட 20 பொருட்களை கொண்டு கலவையை உருவாக்கியுள்ளனர்.
ஹோட்டலின் தலைமை நிர்வாக சமையல்காரர், அனைத்து சமையல்காரர்கள், நிர்வாக உயர் அதிகாரிகள் மற்றும் ஹோட்டலுக்கு வருகை தந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பணியாளர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக விழாவில் பங்கேற்றனர்.

சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு
நுவரெலியாவில் உள்ள அரலியா கிரீன் ஹில்ஸ் ஹோட்டலின் பொது மேலாளர் லக்மல் பெரேரா கூறுகையில்,
வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையினை மிகவும் சிறப்பாக கொண்டாடுவதற்கு எங்களுடைய ஹோட்டல் தயாராக இருப்பதாகவும், கிறிஸ்துமஸ் பருவத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நுவரெலியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் பண்டிகைக்காக கேக் தயாரிக்கும் நிகழ்வு என்பது ஒரு பாரம்பரியமான நிகழ்வு என்ற அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் ஹோட்டலில் பொது மேலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கோலாகலமாக வெட்டப்படும் கிறிஸ்துமஸ் கேக்
இது குறித்து தலைமை நிர்வாக சமையல்காரர் சஞ்சீவ பிரேமதுங்க கூறுகையில்,
தற்போது கலக்கப்படும் கேக் கலவை ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் கலக்கப்பட்டு பதப்படுத்தப்படும் என்றும், 60 கிலோ கேக் அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்கு முன்பு முழுமையாக தயாரித்து முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் (24)ஆம் திகதி இரவு அனைவரும் இரசிக்கும் வகையில் கேக் மிகவும் கோலாகலமாக வெட்டப்படும் கிறிஸ்துமஸ் மாதம் நெருங்கி வரும் நிலையில் அந்த பண்டிகைக்கே சிறப்பானதாக இருக்கும் என்றும் ஹோட்டலின் தலைமை நிர்வாக சமையல்காரர் சஞ்சீவ பிரேமதுங்க கூறியுள்ளார்.






திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
படு மாஸாக விஜய் வீட்டில் நடக்கும் காவேரியின் வளைபாப்பு... மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள வீடியோ இதோ Cineulagam
தங்கமகள் சீரியலை தொடர்ந்து யுவன் மயில்சாமி நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புதிய விவரம் Cineulagam