ட்ரம்பை நெருங்கும் சிக்கல்.. 60 நாட்களுக்குள் படைகளை திரும்பப் பெற காலக்கெடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நாடாளுமன்ற அனுமதியின்றி ஈரான் மீது தொடுத்துள்ள தாக்குதல் வரும் மே 1ஆம் திகதியுடன் சட்டப்பூர்வ சிக்கலைச் சந்திக்கவுள்ளது.
அமெரிக்காவின் யுத்த அதிகாரச் சட்டத்தின் (War Powers Act) படி, நாடாளுமன்ற ஒப்புதல் இன்றி படைகளை நிலைநிறுத்தினால், 60 நாட்களுக்குள் அவற்றை திரும்பப் பெற வேண்டும்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடக்க கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனால் ஏற்பட்ட மோதலில் இதுவரை 5,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இராணுவ நடவடிக்கை
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 110 டொலரைத் தாண்டியதால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மார்ச் 2 அன்று ட்ரம்ப் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால், அதிலிருந்து 60 நாட்கள் கணக்கிடப்பட்டு மே 1 இறுதி நாளாகக் குறிக்கப்பட்டுள்ளது.
இதனை "போர்" (War) என்று அழைக்காமல் "இராணுவ நடவடிக்கை" (Military Operation) என ட்ரம்ப் கூறி வருகிறார். இதன் மூலம் நாடாளுமன்ற அனுமதியைத் தவிர்க்க அவர் முயல்கிறார் என குற்றம் சாட்டப்படுகின்றது.
இந்நிலையில், மே 1க்குள் ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கின்றன.

2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் உருவாக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி (AUMF), காலவரையறையின்றி போரைத் தொடர அனுமதி கோருதல்.
அனுமதியின்றி போரைத் தொடர்ந்தால், அது அமெரிக்கச் சட்டப்படி சட்டவிரோதமானதாகக் கருதப்படும். இது ட்ரம்பிற்கு பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கும்.
ஈரான் மீதான இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறுவதாக ஏற்கனவே கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், மே 1ஆம் திகதி உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 12 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan