நுவரெலியா - சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தை சென்றடைந்த இந்திய துணை ஜனாதிபதி
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று(20.04.2026) இராமாயணத்துடன் தொடர்புடைய ஆலயமாக போற்றப்படுகின்ற நுவரெலியா சீதாஎலிய - சீதையம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டுள்ளார்.
இதன்போது அவருக்கு பாரம்பரிய தமிழ் இசையுடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சீதா எலிய சீதையம்மன் ஆலயத்தில் இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜைகளில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
சீதையம்மன் ஆலயத்திற்கு சென்ற இந்திய துணை ஜனாதிபதி
சீதையம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் , உள்ளிட்ட குழுவினர் இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனை வரவேற்றுள்ளனர்.

இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, கிருஷ்ணன் கலைச்செல்வி, உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் , நுவரெலியா மாநகரசபை முதல்வர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இராமாயணத்துடன் தொடர்புடைய ஆலயமாக போற்றப்படுகின்ற நுவரெலியா சீதாஎலிய, சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனிடம் சீதையம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இந்தியாவில் சீதை சிறைவைக்கப்பட்டிருந்த அசோகவனத்தில் ஓடும் சீதா நதியில் தண்ணீரில் மிதக்கும் அதிசய கற்கள் காணப்படுகின்றன.அவற்றில் ஒன்றினை எமது ஆலயத்திற்கு தரும்படியும் கோரிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளார்.



வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 10 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam