வெளிநாடொன்றில் சிக்கிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
எரித்திரியாவில் ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை கடற்படை வீரர்கள் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குறித்த ஆறு இலங்கையர்களையும் விடுதலை செய்ய வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதியன்று Seagull Maritime நிறுவனத்திற்கு சொந்தமான அஜர்பைஜான் மாலுமி தலைமையில் இயக்கப்படும் ஐரோப்பிய கப்பல் ஒன்று எரித்திரியா கடல் எல்லைக்குள் நுழைந்த போது, எரித்திரியா அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர்.
ராஜதந்திர நடவடிக்கை
சுமார் ஒரு வருட காலம் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை விடுதலை செய்ய பல உயர்மட்ட ராஜதந்திர நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.

இதற்கான நடவடிக்கையில் கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் அமைச்சர் விஜித ஹேரத் நேரடியாகத் தலையிட்டு, குறித்த ஆறு இலங்கையர்களையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
அதற்கமைய அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.