முச்சக்கரவண்டியின் அதி வேகத்தால் 6 பாலர் பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்
முச்சக்கரவண்டியின் அதி வேகத்தால் 6 பாலர் பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் நுவரெலியா நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 6 பாலர் பாடசாலை மாணர்கள் உள்ளிட்ட ஏழுபோர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது.
அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி எதிர் திசையில் இருந்து வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் பகுதி
இந்த விபத்தில் நோர்வூட் பகுதியில் கல்வி பயிலும் 6 பாலர் பள்ளி மாணவர்களும், பாலர் பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியரும் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முச்சக்கர வண்டியின் முன் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பற்ற உதிரி பாகம் காருடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நோர்வூட் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் காரை ஓட்டிச் சென்ற பெண் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri