வடக்கு - கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்க அழைப்பு
வடக்கு - கிழக்கில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25.04.2023) ஹர்த்தால் அனுஸ்டிக்க 6 கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்
தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர்
த.சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவர் க.சுரேஸ்
பிறேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா, ஜனநாயக
போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் ஆகியோரின் கையொப்பத்துடன்
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்
குறித்த அறிக்கையில் மேலும், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் எமது இனத்திற்கு பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்,

எமது இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசாங்கத்தின் திட்டமிட்ட, எமது சுயநிர்ணய உரிமையை நீர்த்துப் போக வைக்கும் வகையில் எமது தாயக மண்ணில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில அபகரிப்பு, குடியேற்றங்களின் மூலம் குடிப்பரம்பலை சிதைத்தல், எமது தொன்மையை வெளிப்படுத்தும் சான்றுககளை அழித்தொழித்தல், இதற்கு ஏதுவாக தமிழ் மக்களின் தொன்மையை வெளிப்படுத்தும் சான்றுகளான சைவ ஆலயங்களை இடித்தும், அழித்தும், பௌத்த சின்னங்களை நிறுவியும், இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் அரசாங்கத்தின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாட்டை எதிர்த்தும்,
அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பொது கட்டமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மாணவர்கள் மற்றும் தமிழ் தேசியப் பற்றாளர்கள் என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 25.04.2023 அன்று எமது தாயகப் பிரதேசத்திவ் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி வடக்கு - கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க தீர்மானித்துள்ளோம்.
கையொப்பமிடாத கட்சிகள்

இதற்கு அனைவரது ஆதரவையும் கோரி நிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த அறிக்கையில் தமிழ்த் தேசியக் கட்சிகளான தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பன கையொப்பம் இடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam