ஆறு அமைச்சர்கள் தொடர்பில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணை!
தேசிய மக்கள் சக்தியின் முக்கிய அமைச்சர்கள் ஆறு பேருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி சலவை சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்தமை குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆறு அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி ஐந்து அமைச்சரவை அமைச்சர்களும் ஒரு பிரதி அமைச்சர் இந்த விசாரணை வலைக்குள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அமைச்சர்கள் சொத்துக்களை குவித்த விதம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்க, குமார ஜயக்கொடி, சுனில் ஹந்துநெத்தி, நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்க லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஊழல் மோசடி விரயம் என்பனவற்றுக்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர் ஜாமுனி கமன்த துஷாரா என்பவர் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக கமந்த துஷாரா என்பவரை எதிர்வரும் 30ம் திகதி லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.