கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் அதிரடியாக கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
சுமார் 1 கோடி 13 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சீனப் பிரஜைகள்
கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் 6 பேரும் வணிகர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் தாய் எயார்வேஸ், எயார் சைனா மற்றும் தாய் எயார் ஆசியா ஆகிய மூன்று வெவ்வேறு விமானங்கள் மூலம் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
அவர்களது பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 75,900 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தற்போது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்: எலான் மஸ்கின் ஆதரவு செய்தி News Lankasri