யுத்தம் நிறைவடைந்தாலும் இலங்கையர்களுக்கு தொடர்ந்து காத்திருக்கும் சிக்கல்
மத்தியக் கிழக்கு யுத்தம் நிறைவடைந்தாலும் அதன் தாக்கம் இலங்கையில் தொடர்ந்து சில மாதங்கள் வரை நீடிக்கும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்றையதினம்(15/04/2026) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் தற்போது பல சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், நாட்டைத் தொடர்ந்து சீராக முன்னேற்றி வருகிறது.
நமது நாட்டின் மிக முக்கியமான கலாசார விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், ஒரு நாடாக நாமும் உலகமும் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.

ஒருபுறம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் போர், அது முடிவடைந்தாலும் இல்லாவிட்டாலும், இன்னும் சில மாதங்களுக்கு அதன் தாக்கம் இருக்கும்.
மறுபுறம், நாம் சந்தித்த தித்வா புயல் போன்ற சவால்களுக்கு மத்தியிலும், நாம் நாட்டைத் தொடர்ந்து சீராக முன்னேற்றி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam