திருச்சி அரசு மருத்துவமனையில் ஈழத்தமிழர்கள் 6பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி (PHOTOS)
திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் தமது விடுதலைக்காக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.
கடந்த 20ம் திகதி முதல் இவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
ஈழத்தமிழ் அகதிகளின் கோரிக்கை
இது தொடர்பில் போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் இவர்கள் 6வது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தில் சுட்டெரிக்கும் இந்த கொடூரமான வெயிலில் உணர்வுகளும் உயிரும் உருகி போனாலும் ஏற்கத் தயார் என்ற மனநிலையோடு எங்கள் வாழ்க்கையை போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.
தங்கள் குடும்பங்கள் மறுவாழ்வு முகாம்களில் உணவுக்கு அல்லல்படும் நிலையில் வாழ்கின்றனர் எனவும் இலங்கையில் எங்கள் குடும்பங்கள் உணவுக்காக கையேந்தும் மிக வேதனையான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
உழைக்க வேண்டிய நாங்கள் உழைக்க வேண்டிய வயதில், உழைக்க வேண்டிய காலத்தில், இங்கு காலங்களை வீண் விரயம் செய்து கொண்டிருப்பதாகவும் வேதனையுடன் உண்ணாவிரத அகிம்சை போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் ஆறுநாட்களாக தொடர்ந்த இந்த போராட்டத்தில் ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
அங்கும் அவர்களை சரியாக கவனிக்கவில்லை என மிக மன வருத்ததுடன் தெரிவிக்கின்றோம். இலங்கை மக்களுக்கு உணவு பொருள் கொடுத்து உதவிய முதல்வர் ஸ்டாலின் தங்கள் சிக்கலுக்கு தீர்வினை விரைந்தது தர வேண்டும். அது தொடர்பிலான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் வேதனையுடனான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இந்திய சிறையில் ஆறாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம் (Photos) |





பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
