ஆறு கோடி தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்! நிபுணர்கள் அச்சம்
அமெரிக்காவின் மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே இதுவரை கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இருந்தாலும், டென்னஸீ, வடக்கு கரோலினா போன்ற மாகாணங்களில் தடுப்பூசிகளுக்கான தேவை வெகுவாகக் குறைந்து, தினமும் லட்சக்கணக்கான தடுப்பூசிகள் மத்திய அரசிடம் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
ஒக்லஹோமா மாகாணத்துக்கு வாரந்தோறும் 2 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டும், அந்த மாகாணம் ஒரு மாதத்துக்கும் மேலாக புதிதாக கோவிட் தடுப்பூசிகளை வாங்கவே இல்லை. இதனால், அமெரிக்க அரசிடம் தடுப்பூசிகள் லட்சக் கணக்கில் உபரியாவது நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது.
இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என, பல்வேறு விளம்பரங்களையும், சலுகைகளையும் அரசு அறிவித்து வருகிறது. இருந்தும் அங்கு தடுப்பூசி உபரியாவதைத் தடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் காலாவதியாகும் அபாயம் நிலவி வருவதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan