சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது: வாகனங்களும் மீட்பு
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வடமுனை மற்றும் ரிதிதென்னை பகுதியில் அனுமதிப்பத்திரங்களை மீறி உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி மண் அகழ்வில் ஈடுபட்ட 6 பேரை விசேட அதிரடிப்படையின் கைது செய்ததுடன் 3 உழவு இயந்திரம், 3 கனரக வாகனங்களை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் சம்பவதினமான நேற்று(23) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் அனுமதிப்பத்திரத்தை மீறி உழவு இயந்திரத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்ததுடன் 3 உழவு இயந்திரத்தை மீட்டனர்.
அதேவேளை ரிதிதென்னை பகுதியில் அனுமதிப்பத்திரத்தை மீறி கனரக வாகனத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்ததுடன் 3 கனரக வாகனங்களை மீட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களையும். வாகனங்களையும் விசேட அதிரடிப்படையின் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இவர்களை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam