வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது
வவுனியா, கோவில்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, கோவிற்குளம் 9ம் ஒழுங்கையில் வீதியில் செல்பவர்களை வழிமறித்து இளைஞர் குழு நேற்று நள்ளிரவு 12.10 மணியளவில் அவ்வீதியூடாக செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரியினால் தாக்கியதுடன் அவர்களின் வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் சில வீடுகளுக்குள் புகுந்தும் வீட்டிலிலுள்ளவர்கள் மீது தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர். இவ் வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிசீரீவி மற்றும் மக்களின் நேரடி வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.





உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
