இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முற்பட்ட 6 பேர் கைது(Photos)
இந்தியா- தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த 2090 கிலோ கஞ்சாவுடன் 6 பேர் தூத்துக்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்றையதினம் (12.05.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து தொடர்ச்சியாக கும்பல் ஒன்று திட்டமிட்டு தமிழகம், கேரளா மற்றும் தூத்துக்குடிக்கு கஞ்சாவை விற்பனை செய்துவருகின்றதாக தூத்துக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 4 கோடி ரூபா மதிப்பிலான 2090 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் விற்பனை செய்து வருவதாகவும், மேலும் இந்த கஞ்சாவினை இலங்கைக்கு கடத்த இருந்ததாக தெரியவந்ததுள்ளது.
மீட்கப்பட்டுள்ள பெருமளவு கஞ்சா
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது சந்தேகநபர்கள் 6 பேரை தூத்துக்குடியில் கைது செய்துள்ளதுடன் 2090 கிலோ கஞ்சா, 25 ஆயிரம ரூபா பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மற்றும் 8 கையடக்க தொலைபேசிகளை மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளமையும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.







வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
