ஹேக்கர்களால் திருடப்பட்ட 6.6 மில்லியன் டொலர் ஓமானில் : இலங்கையில் காணாமல் போன பணமா என விசாரணை
ஆசிய நாடு ஒன்றில் இணையவழிக் குற்றவாளிகளால் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் டொலர் ரொக்கப் பணத்தை ஓமான் பொலிஸார் மீட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட நிதியை ஓமான் வங்கி ஒன்றிலிருந்து உள்ளூர் நாணயமாக மாற்ற முயன்ற நபர்களை ஓமான் பொலிஸ் திணைக்களம் தடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையைத் தவிர வேறு எந்த ஆசிய நாட்டிலும்
இன்டர்போலின் ஆதரவுடன் ஓமான் பொலிஸாரால் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட பணம் எந்த ஆசிய நாட்டைச் சேர்ந்தது என்பது இன்னும் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இலங்கையில், திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலரும், அஞ்சல் திணைக்களத்திலிருந்து 625,000 டொலரும் திருடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
ஓமானில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பணத்தில், இலங்கையில் காணாமல் போன பணமும் அடங்குமா என்பது குறித்து தற்போது மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், இலங்கையைத் தவிர, சமீபத்தில் வேறு எந்த ஆசிய நாட்டிலிருந்தும் பணம் காணாமல் போனது போன்ற சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan