சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் நுழைந்த 6 ஆயிரம் வெளிநாட்டவர்கள் கைது (Photos)
கடந்த இரண்டு மாதங்களில் (ஜனவரி முதல் மார்ச் முதல் வாரம் வரை) தாய்லாந்தின் காஞ்சனபுரி, பிரசுட்கிறீகன் மாவட்டங்களில் சட்டவிரோதமாக நுழைந்த சுமார் 6 ஆயிரம் மியன்மார் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களான மியன்மார் நாட்டவர்களை ஆட்கடத்தல் தரகர்கள் காட்டுப் பாதைகள் வழியாக மியன்மாரிலிருந்து தாய்லாந்துக்குள் அழைத்துச் செல்வது தொடர்ந்து வருகிறது.
“எல்லையைக் கடப்பதற்கு மியான்மர் நாட்டவர்கள் காட்டுப் பாதைகளைப் பயன்படுத்துகின்றனர். சிலர் தப்பிவிட்டாலும் நாள்தோறும் பல மியன்மாரிகள் கைதாவதை நாங்கள் காண்கிறோம். எல்லையில் நிலைமை மோசமாக இருந்தால் தரகர்கள் மியன்மாரிகளை அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுகின்றனர்.பின்னர், அவர்கள் தாய்லாந்து பாதுகாப்புப் படையினரிடம் எளிதாகச் சிக்கி விடுகின்றனர்,” என எல்லையோரவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் தொடக்கம் முதலே தாய்லாந்துக்குள் செல்லும் மியன்மாரிகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துக் காணப்படுகிறது.
கடந்த ஜனவரி 2022இல் மட்டும்
சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் நுழைந்த 5,000 மியன்மார் நாட்டவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர் என தாய்லாந்து இராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை
தெரிவித்துள்ளது.