ஆண்டுக்கு 6,000 குழந்தைகள் பாதிப்பு! பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5,000 முதல் 6,000 வரையான குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளுடன் பிறப்பதாக சுகாதார அமைச்சு (MOH) தெரிவித்துள்ளது.
இதில் சுமார் 650 குழந்தைகள் பிறந்த முதலாம் ஆண்டிலேயே சிக்கல்கள் காரணமாக உயிரிழப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
நரம்பியல் கோளாறுகள் மற்றும் இதர சிக்கல்
இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 250,000 முதல் 350,000 வரையான நேரடிப் பிறப்புகள் (Live births) பதிவாகின்றன.
பிறவி இதய நோய்கள், நரம்பியல் கோளாறுகள் மற்றும் இதர சிக்கலான உடல் குறைபாடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.

மரபணு சார்ந்த காரணிகள் அல்லது கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாக இக்குறைபாடுகள் ஏற்படுகின்றன.
விசேட விழிப்புணர்வு
பிறவிக்குறைபாடுகள் என்பவை கருவிலேயே ஏற்படும் உடல் அல்லது செயல்பாடு சார்ந்த மாற்றங்களாகும். இவை கர்ப்ப காலத்தின் போது, பிரசவத்தின் போது அல்லது குழந்தையின் வளர்ச்சியின் பிந்தைய நிலைகளில் கண்டறியப்படலாம்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் ரஞ்சித் படுவன்துடாவ கூறுகையில், பிறவிக்குறைபாடுகளைத் தடுத்தல், முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அடுத்த திங்கட்கிழமை முதல் ஒரு விசேட விழிப்புணர்வு வாரம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri