உலகப் பொருளாதார மன்றம் எரிசக்தி பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள 5 முக்கிய பரிந்துரைகள்!
உலக நாடுகள் மற்றும் நிறுவனங்கள் எரிசக்தி துறையில் ஐந்து முக்கிய அம்சங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுவதன் மூலமே 2030ஆம் ஆண்டிற்குள் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுச்சூழல் இலக்குகளை அடைய முடியும் என உலகப் பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.
டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டத்தில், உலக நாடுகள் மற்றும் நிறுவனங்கள் எரிசக்தி துறையில் கவனம் செலுத்த வேண்டிய ஐந்து முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகள்
புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், எரிசக்தி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாப்பதும், அதே சமயம் கார்பன் உமிழ்வைக் குறைப்பதும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு (சூரிய ஒளி, காற்று) மாறுவதற்கு தற்போதைய மின் விநியோகக் கட்டமைப்புகள் (Grids) போதுமானதாக இல்லை எனவே, நவீன மின் சேமிப்பு வசதிகள் மற்றும் விநியோக முறைகளில் முதலீடு செய்வது அவசியம்.

மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகள் தயாரிக்கத் தேவையான லித்தியம், கோபால்ட் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்களின் விநியோகச் சங்கிலியை (Supply Chain) பலப்படுத்துவது எரிசக்தி மாற்றத்திற்கு மிக முக்கியமானது.
செயற்கை நுண்ணறிவு
வளர்ந்து வரும் நாடுகளுக்கு தூய்மையான எரிசக்தி திட்டங்களைச் செயல்படுத்த தேவையான நிதியுதவிகளை உலக நாடுகள் வழங்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எரிசக்தி பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும்.
இந்த ஐந்து காரணிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவதன் மூலமே 2030ஆம் ஆண்டிற்குள் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுச்சூழல் இலக்குகளை அடைய முடியும் என உலகப் பொருளாதார மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri