கிளிநொச்சியில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 582 வழக்கு பதிவுகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் ஹெரோயின், ஐஸ் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களுடன் தொடர்புடைய 582 வழக்குகள் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்துடன் தொடர்புபட்ட 547 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை பொலிஸார் மேலும் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்படி, கடந்த ஆண்டு போதைப் பொருள் தொடர்பில் 582 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 547 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
அதில், 54 பேர் நீதிமன்ற தடுப்பு கட்டளையின் கீழ், தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் 28 பேர் புணர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக தகவல்கள் தெரிவித்துள்ளன.
போதைப்பொருட்களுடன் நடந்த கைது
இந்நிலையில், கடந்த ஆண்டிலேயே ஹெரோயின் தொடர்பில் 209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 209 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு 28 பேர் தடுப்பு கட்டளையின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் 19 பேர் புனர்வாழ்வு மையங்களில் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர்.

அதே சமயம், ஐஸ் போதை பொருள் தொடர்பாக 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் 141 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு 10 பேர் தடுப்பு கட்டளையின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பேர் புனர்வாழ்வு மையங்களில் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர்.
மேலும், கஞ்சா மற்றும் குஸ்போதை பொருள் தொடர்பில் 225 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 197 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, 16 பேர் தடுப்பு கட்டளையின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஹெரோயின், ஐஸ்,கஞ்சா, குஸ் போன்ற போதை பொருட்கள் தொடர்பில் கடந்த 2023ஆம் ஆண்டில் 300 வழக்குகளும் 2024ஆம் ஆண்டில் 341 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.