இன்ஸ்டாகிராம் களியாட்ட விருந்தில் கலந்து கொண்ட 57 இளைஞர் யுவதிகள் கைது!
கம்பஹா - பமுனுகம, உஸ்வெட்டகேயாவ பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத போதைப்பொருள் விருந்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உஸ்வெட்டகேயாவ பகுதியில் உள்ள ஹோட்டலில் நேற்று (23) இரவு இன்ஸ்டாகிராம் மூலம் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி விருந்து நடத்தப்படுவதாகக் பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து, அங்கு நடத்தப்பட்ட சோதனையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
ஐஸ் மற்றும் கேரள கஞ்சா
அதன்படி, இந்த விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் இளைஞர்கள் ஐஸ் மற்றும் கஞ்சா போதைபொருட்களை பயன்படுத்தியுள்ளதாகவும், , மேலும் ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த சுற்றிவளைப்பில் 7 பெண் சந்தேக நபர்களையும் 34 ஆண் சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விருந்து நடைபெற்ற ஹோட்டலின் உரிமையாளர் 03 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri