56 ஆண்டுகளாகியும் பேருந்து தரிப்பிடம் இல்லை! மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
திருகோணமலை- முள்ளிபொத்தானை நகரில், கடந்த 56 ஆண்டுகளாக முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாதிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
தம்பலகாமம் பிரதேச சபை அலுவலகமே இந்த பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் அமைந்துள்ளது.
இவ்வாறான முக்கியமான இடத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாதிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
கோரிக்கை
நாட்டின் பல பகுதிகளிலும் நவீன பேருந்து தரிப்பிடங்கள், ஸ்மார்ட் பஸ் நிலையங்கள் எனப் பொதுப் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், முள்ளிபொத்தானை மக்களுக்கு இன்னும் அடிப்படை வசதியான ஒரு முறையான பஸ் தரிப்பிடம் கிடைக்காதது கவலைக்குரிய விடயமாகும்.

எனவே, முள்ளிபொத்தானை நகரின் பொதுமக்களின் நீண்டகாலத் தேவையைக் கருத்திற்கொண்டு, இவ்விடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய முறையான பேருந்து தரிப்பிடமொன்றை அமைத்துத் தருவதற்கு உரிய அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ராஜபக்சக்களின் நெருக்கமான நபரின் சர்ச்சைக்குரிய தகவல்கள் - பெண்ணின் வாக்குமூலத்தில் கசியவுள்ள இரகசியங்கள்


பட்டத்து இளவரசரின் படுகொலை... திகிலூட்டும் 3 கணிப்புகளை வெளியிட்ட அமெரிக்க நாஸ்ட்ராடாமஸ் News Lankasri