ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது
ஜெனிவா நேரப்படி இன்று (26) முற்பகல் 9.30 மணியளவில் இந்த கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தொடரானது, இன்று தொடக்கம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன் 110இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதிகளும் இதன்போது உரையாற்றவுள்ளனர்.
இலங்கை சார்பிலான பிரதிநிதிகள் பங்கேற்பு
மேலும், இப் பேரவையின் 55ஆவது கூட்டத்தொடரில் இலங்கை சார்பிலும் பிரதிநிதிகள் குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

சர்வதேச நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மீளாய்வு வாய்மொழி மூலமாக எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
அத்தோடு, அன்றைய தினம் கொலம்பியா,குவாட்டமாலா, ஹொண்டுராஸ்,சைப்பிரஸ், நிக்காராகுவா உள்ளிட்ட நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கைகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri