பம்பலப்பிட்டிய தொடருந்து நிலைய புனரமைப்புப் பணிகளுக்காக 55 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
கொழும்பு, பம்பலப்பிட்டிய தொடருந்து நிலையம் பயணிகளின் வசதி கருதி 55 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படுகின்றது.
க்ளீன் ஸ்ரீலங்கா தேசிய செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் 'கனவுத் தலம்' (“Dream Destination” ) திட்டத்தின் கீழ், பம்பலப்பிட்டிய தொடருந்து நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புனரமைப்புப் பணிகள்
போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டம், பொது - தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது.

புனரமைப்புப் பணிகளில் கணிசமான அளவு தற்போதைக்கு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அனைத்து புனரமைப்புப் பணிகளும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.