மட்டக்களப்பில் 24 மணி நேரத்தில் 55 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 24மணி நேரத்தில் 530 ரிபீட் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வாழைச்சேனை பிரதேசத்தில் 25 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 பேர் கோவிட் தொற்றுக்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 08 பேரும் களுவாஞ்சிகுடி சுகாதார பிரிவில் 03 பேரும், ஆரையம்பதி சுகாதார பிரிவில் 03 பேரும், சுகாதார பணியாளர்கள் 04 பேரும், சிறைக்கைதிகள் 02 பேருமாக 55 பேர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இறுதி வாரத்தில் 235 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூன்றாவது அலையின் காரணமாக இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7268 அன்டிஜன்
மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 587 பேர் இதுவரையில் கோவிட்
தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், 12பேர் மரணமடைந்துள்ளதாகவும் பணிப்பாளர்
வைத்தியர் மயூரன் மேலும் தெரிவித்துள்ளார்.