தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 54,359 பேர் இதுவரை சிக்கினார்கள்
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 108 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 359ஆக உயர்வடைந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, மாகாணங்களைக் கடந்து பயணிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையுத்தரவையும் மீறி நேற்று மேல் மாகாணத்துக்குள் உட்பிரவேசிக்க முயன்ற 582 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று அதிவேக வீதிகளுக்குப் பிரவேசிக்கும் வாகனங்களும் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் அவர் மேலும் கூறினார்.
உக்ரைனில் போரிஸ் ஜான்சனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் News Lankasri