தென்பகுதி கடலில் கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை
இலங்கையின் தென் கடலில் இன்று (17) காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகில் 53 கிலோகிராம் ஹெராயினை ஏற்றிச் சென்றதாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இழுவைப் படகு ஒன்றில் போதை பொருள்கள் கடத்தப்படுவதாக இலங்கைக் கடற்படைக்கு நேற்று இரவு கிடைத்த தகலுக்கு அமைய தென்பகுதி கடலில் கடற்படை கப்பல் ஒன்று கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
சோதனை நடவடிக்கை
அந்த சந்தர்ப்பத்தில் பொதிகளுடன் பயணித்த படகை மடக்கி சோதனையிட்டதில் அங்கு போதை பொருள் இருப்பதாக சந்தேகத்தில் படகில் வந்த ஐந்த பேருடன் படகை கடற்படை கைப்பற்றியது.
இந்த சோதனை நடவடிக்கை சர்வதேச கடற் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இழுவைப் படகு, அதன் பணியாளர்கள் மற்றும் போதைப்பொருள் பொதிகள் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.





கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
