மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் ஒருவர் மாயம் : 522 பேர் இடம்பெயர்வு
சீரற்ற கால நிலை காரணமாக மட்டக்களப்பில் வெள்ள நீரினால் ஒருவர் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, வெள்ளத்தினால் 161 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதுடன் குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பிரதேசங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் மழையினால் மாவட்டதிலுள்ள பல தாழ்நில பிரதேசங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதுடன் பல பிரதேசங்களில் வீதிகளில் உள்ள பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
போக்குவரத்து
இந்த வெள்ளத்தினால் பட்டிப்பளை, காத்தான்குடி, கோரளைப்பற்று கிரான், மண்முனைவடக்கு, ஏறாவூர்பற்று செங்கலடி, பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 161 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளைவிட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதேவேளை, வெள்ளத்தினால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான போக்குவரத்து மற்று வவுணதீவுக்கும் மட்டக்களப்பு நகருக்கும் இடையிலானதும் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளிக்கும் மண்டூருக்குமான பிரதான தாம்போதிக்கு மேலால் வீதியை மூடி 4 அடி உயரத்தில் வெள்ள நீரி பாய்து ஓடும் நிலையில்; அதனை கடந்து செல்ல முற்பட்ட ஆண் ஒருவரை வெள்ள நீர் இழுத்து சென்று காணாமல் போயுள்ளார்.
மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் இன்று (26) காலை 8.30 மணிவரை ஆகக்கூடிய மழைவீழ்ச்சியாக வாகனேரியில் 139.0 மில்லிலீற்றரும் மட்டக்களப்பில் 103.4 மில்லி லீற்றருமாகவும் நேற்று (25) காலை 8.30 மணி தொடக்கம் பகல் 11.30 மணிவரை மட்டக்களப்பில் 34 மில்லிலீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
மாவட்டதிலுள்ள உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவு 10 உயரத்திலும் நவகிரிகுளம் றூகம்குளம், வாகனேரிகுளம், கட்டுமுறிவுகுளம், கித்துள்குளம், வெலியாகண்டிகுளம், வடமுனைகுளம், புனானைகுளம், ஆகிய குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அந்த அந்த குளங்களின் நீர் மட்டத்துக்கு ஏற்றவாறு அளவில் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேவேளை மழையுடனான காற்றினால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஈச்சம்தீவு கன்னங்குடா பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருகில் இருந்த மரம் ஒன்று கட்டித்தின் மீது முறிந்து வீழ்ந்ததால் கட்டிடம் பாதிக்கப்பட்டதுடன் மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை மாவட்டத்தில் வீதிகளில் முறிந்து வீழ்ந்த மரங்களை மாநகரசபையின் தீயணைப்பு படையினர் வெட்டி அகற்றிவருகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதுடன் உயர்தர மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலைகளுக்கு சென்று பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன் இன்னும் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் எற்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri