வவுனியாவில் இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து மாணவன் சாதனை

Parliament of Sri Lanka Vavuniya Anura Kumara Dissanayaka Northern Province of Sri Lanka
By Thileepan Nov 26, 2024 01:23 PM GMT
Report

வவுனியாவில் (Vavuniya) இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து மாணவன் ஒருவன் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார்.

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவனே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

அகில இலங்கை ரீதியில் இடம்பெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டியினை முன்னிட்டு குறித்த மாணவன் இலத்திரனியல் முறையில் வாக்களிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்துள்ளார்.

நினைவேந்தல்களை தடுக்க அரசாங்கத்துக்கு அனுமதி இல்லை: அநுர தரப்பு சுட்டிக்காட்டு

நினைவேந்தல்களை தடுக்க அரசாங்கத்துக்கு அனுமதி இல்லை: அநுர தரப்பு சுட்டிக்காட்டு

வாக்களிக்கும் இயந்திரம்

குறித்த இயந்திரத்தில் வாக்காளர்கள் தமது கடவுச் சொல்லை (வாக்கு சீட்டு இலக்கம்) செலுத்தி தமது கைவிரல் அடையாளத்தை பதிவு செய்து விரும்பிய கட்சிக்கு வாக்களிக்க கூடியதாக அது வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மொத்த வாக்குளை அறியும் வசதியும் காணப்படுகின்றது.

வவுனியாவில் இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து மாணவன் சாதனை | Student Achievement In Inventing Voting Machine

போலியான முறையில் மீண்டும் ஒருவர் வாக்குகளை அளிக்க முயன்றால் அதனை அந்த இயந்திரம் நிராகரித்து குறித்த நபரை வெளிப்படுத்தும் வகையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட புத்தாக்க போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளதுடன், மாகாணத்தில் இரண்டாம் இடத்தையும், தேசிய ரீதியில் முதலாம் இடத்தையும் குறித்த கண்டுபிடிப்பு பெற்றுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவனுக்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து வாழத்துக்கள் குவிந்த வண்ணமுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மாணவன் கோரிக்கை

இது குறித்து சி.கபிலாஸ் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் செலவு அதிகமாக காணப்பட்டதாக எமது பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து அதனை குறைக்கும் வகையில் ஏதாவது செய்ய முடியுமா என புத்தாக்க போட்டியில் சிந்தித்தேன். அதன் விளைவே இந்த இயந்திரம்.

வவுனியாவில் இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து மாணவன் சாதனை | Student Achievement In Inventing Voting Machine

அத்துடன், குறித்த இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை மேலும் மெரு கூட்டி எதிர்காலத்தில் தேர்தல்களில் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

பாடசாலையின் மாணவர் நாடாளுன்ற தேர்தலில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தினர்.

தேர்தல் செலவுகளை குறைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ள ஜனாதிபதி எனது இந்தக் கண்டு பிடிப்பை பார்வையிட்டு, செலவு குறைந்த முறையில் வாக்களிக்க கூடியதாக இவ்வாறான இயந்திரத்தை மெருகூட்டி பயன்படுத்த தனக்கு உதவ வேண்டும் எனவும் அந்த மாணவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் அம்பாறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் அம்பாறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Gallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US