நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு
வீடற்ற மக்களுக்கு 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கல்வி, காணி, வீடமைப்பு மற்றும் வர்த்தக உரிமைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை வலுவான பொருளாதாரத்தின் அங்கமாக மாற்றுவதற்கு அவர்கள் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மோதர மற்றும் ரந்திய உயன அடுக்குமாடி குடியிருப்புகளை கையளிக்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
வீட்டுத் திட்டம்
2010ஆம் ஆண்டு காஜிமா தோட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக 2010ஆம் ஆண்டு ரந்திய உயன வீட்டுத் தொகுதியிலுள்ள 294 வீடுகள் ஜனாதிபதி தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்காக 12,855 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் இலவச காணி அல்லது வீட்டு உரிமைகள் வழங்கப்படவில்லை.
மாதாந்த வாடகை
இந்த வீடுகளில் மாதாந்த வாடகையாக 4,500 ரூபா அறவிடப்படாமல் மக்களுக்கு இலவச உரிமை வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
அத்துடன், தான் பிரதமராக இருந்த போது சீன அரசாங்கம் வழங்கிய 1,996 வீடுகள் அடுத்த இரண்டு வருடங்களில் மக்களுக்கு வழங்கப்படும் எனவும் மக்களை பொருளாதாரத்தில் அங்கம் வகிப்பதன் மூலம் உடைக்க முடியாத பரந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.