50,000 தண்டம் : கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை தொடர்வதாலும் மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் இலங்கையில் தற்பொழுது டெங்குகாய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறதாகக் கொழும்பு மாநகரசபையின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கார்த்திகேசு ஸ்ரீ பிரதாபன் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் சேர்ந்து வாழும் வெள்ளவத்தை உள்ளிட்ட கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்பில் மாநகரசபையின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கார்த்திகேசு ஸ்ரீ பிரதாபனை தொடர்புகொண்டு வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஒன்றரை வருடமாக கோவிட் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் கவனம் செலுத்தியமையாலும், மக்களுக்குத் தடுப்பூசிகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளமையாலும் கூடுதலான சுகாதார உத்தியோகத்தர்கள் டெங்கு பற்றிய கவனமெடுத்தலிலிருந்து விலகியிருக்க நேர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக டெங்கு நோயாளர்கள் அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாகவுள்ளது.
அதிலும் அடையாளம் காணப்படும் டெங்கு நோயாளர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் டெங்கு நுளம்பின் குடம்பிகள் காணக் கூடியதாகவுள்ளது.
மக்கள் மத்தியில் டெங்குகாய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு காணப்படும் பட்சத்திலேயே அதனை செயல்திறன் மிக்க வகையில் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
