இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 அகதிகள் உயிரிழப்பு: ஹமாஸ் தரப்பு தகவல்
காசா எல்லையில் அமைக்கப்பட்டு இருந்த அகதிகள் முகாமில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"காசா எல்லை பகுதியின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த முகாம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 150-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் பதில் வழங்கவில்லை
இஸ்ரேல் இந்த தாக்குதல் மூலம் அதிக குடியிருப்புகள் உள்ள பகுதியை குறிவைத்து இருக்கிறது என்பது தெரியவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் ஹமாஸ் தெரிவித்து இருக்கும் இந்த குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.
மேலும் இந்த தாக்குதல் குறித்து வெளியான காணொளியில் இடிந்து விழுந்த குடியிருப்பு பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து உயிரிழந்தோர் சடலங்கள் மீட்கப்படும் காட்சிகள் இடம்பெற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
