நைஜீரியாவில் ஆயுதமேந்திய கும்பல் அட்டூழியம்: விடிய விடிய நடத்திய தாக்குதலில் 50 பேர் சுட்டுக்கொலை
வடமேற்கு நைஜீரியாவின் ஜாம்ஃபாரா மாகாணத்தில் உள்ள துங்கன் தட்சே (Tungan Dutse) கிராமத்தில், வியாழக்கிழமை இரவு புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல் விடிய விடிய நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.
மோட்டார் சைக்கிள்களில் வந்த நூற்றுக்கணக்கான ஆயுததாரிகள், வீடுகளுக்குத் தீ வைத்தும், கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல்
இச்சம்பவத்தின் போது ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகளை அந்த கும்பல் கடத்திச் சென்றுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடப்பதற்கு முன்னரே 150க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஆயுததாரிகள் நடமாடுவது குறித்து பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
நைஜீரியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அதிகரித்து வரும் இத்தகைய வன்முறைகளைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து அந்நாட்டு இராணுவம் தற்போது செயல்பட்டு வருகிறது.
நைஜீரிய கட்டளை
சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கத் தவறினால் இராணுவ ரீதியாகத் தலையிட நேரிடும் என எச்சரித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நைஜீரியப் படைகளுக்குப் பயிற்சி அளிக்கவும், உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் 100 அமெரிக்க வீரர்கள் நைஜீரியா வந்துள்ளனர்.
அமெரிக்க வீரர்கள் நேரடியாகப் போரில் ஈடுபட மாட்டார்கள் என்றும், நைஜீரியக் கட்டளையின் கீழ் தொழில்நுட்ப உதவிகளை மட்டுமே வழங்குவார்கள் என்றும் அந்நாட்டு இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! வாக்குமூலத்தில் கசிந்த தகவல்: முக்கிய குற்றவாளி நாட்டிலிருந்து தப்பியோட்டம்
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri